/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உலக காண்டாமிருகம் தினம் மாணவர்களுக்கு ஓவிய போட்டி
/
உலக காண்டாமிருகம் தினம் மாணவர்களுக்கு ஓவிய போட்டி
ADDED : செப் 16, 2024 05:35 AM
புதுச்சேரி, : உலக காண்டாமிருகம் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களின் ஓவிய படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் செப்டம்பர் 22ம் தேதி உலக காண்டாமிருகம் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இதனையொட்டி பாண்டி மெரீனா, ஜாய்லேண்ட் பொழுதுபோக்கு பூங்கா இணைந்து காண்டாமிருகம் விழிப்பணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. அதன்ஒரு பகுதியாக புதுச்சேரி உள்ள அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் ஓவியப்போட்டிகள் நடத்தப்படுகிறது. இதற்காக பள்ளி நிர்வாகத்துக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வரும் 18ம் தேதிக்குள் மாணவர்கள் கோட்டோவியங்களுக்கு வண்ணம் தீர்ட்டி பாண்டி மெரீனா நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். மாணவர்கள் சுய விருப்பமாகவும் படங்களை வரைந்து அனுப்பலாம். வரும் 22ம் தேதி பாண்டி மெரீனா மக்கள் மேடையில் நடைபெறும் விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும் விபரங்களுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் 88709 40548 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

