/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணை ராணுவம் புதுச்சேரிக்கு வருகை
/
துணை ராணுவம் புதுச்சேரிக்கு வருகை
ADDED : ஏப் 09, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தேர்தலை முன்னிட்டு 8 கம்பெனி துணை ராணுவப்படை புதுச்சேரிக்கு நேற்று இரவு வந்துள்ளது.
புதுச்சேரியில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாடு ஆயுதப்படை இருந்து 4 கம்பெனிகளும், ஐதராபாத் மத்திய தொழில் பாதுகாப்பு படை 4 கம்பெனிகள் வந்துள்ளனர்.
மொத்தமாக 640 துணை ராணுவம் போலீசார் நேற்று நள்ளிரவு புதுச்சேரி வந்துள்ளனர்.
இதில் 5 கம்பெனி புதுச்சேரிக்கும், காரைக்கால், மாகி, ஏனாம் தலா ஒரு கம்பெனி தேர்தல் நடக்க உள்ள பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

