/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேதபுரீஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த விழா
/
வேதபுரீஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த விழா
ADDED : செப் 13, 2024 06:47 AM

புதுச்சேரி: வேதபுரீஸ்வரர் கோவிலில் நடந்த, பிட்டுக்கு மண் சுமந்த விழா சிறப்பு வழிபாட்டில், ஏராளமானோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி, காந்தி வீதியில், திரிபுர சுந்தரி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும், ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று, சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த விழா நடந்து வருகிறது.
இந்தாண்டிற்கான விழா, நேற்று நடந்தது. இதையொட்டி காலை 7:00 மணிக்கு, வேதபுரீஸ்வரர், திரிபுர சுந்தரி அம்பாள் மற்றும் சந்திரசேகரருக்கு அபிேஷகம் நடந்தது.
காலை 10:30 மணிக்கு, சுவாமி மற்றும் அம்பாளுக்கு மகா தீபாராதனை, தொடர்ந்து சந்திரசேகரர் பிட்டுக்கு மண் சுமக்கும் சிறப்பு திருக்கோலத்தில், கோவில் குளத்திற்கு புறப்படும் நிகழ்வும் நடந்தன.
தொடர்ந்து காலை 11:00 மணிக்கு கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்வசம், சொக்கநாத பெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி, மகா தீபாராதனை நடந்தது. நிறைவாக பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

