/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடற்கரை சாலையில் போலீசார், கமாண்டோ படை அணிவகுப்பு
/
கடற்கரை சாலையில் போலீசார், கமாண்டோ படை அணிவகுப்பு
ADDED : பிப் 23, 2025 05:54 AM

புதுச்சேரி : குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, கிழக்குப் பகுதி போலீசார் நேற்றிரவு கமாண்டோ படையினருடன் கடற்கரை சாலையில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
புதுச்சேரி, ரெயின்போ நகரில் சமீபத்தில் 3 ரவுடிகள் கொடூரமாக நிலையில், வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டாலும், ஒரே நேரத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொது மக்களிடயே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை சம்பவத்திற்கு பிறகு, போலீசார் இரவு நேர ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கிழக்குப் பகுதி எஸ்.பி., ரகுநாயகம் உத்தரவின் பேரில், பெரிய கடை, ஓதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், செந்தில்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் கமாண்டோ படையினருடன் நேற்றிரவு கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
அப்போது, சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து விசாரணை நடத்தியதுடன். குடிபோதையில் பொது இடங்களில் ரகளையில் ஈடுபட்டவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். போலீசாரின் திடீர் கொடி அணிவகுப்பு காரணமாக, கடற்கரை சாலையில் பரபரப்பு நிலவியது.

