ADDED : ஏப் 17, 2024 12:24 AM

புதுச்சேரி : கதிர்காமத்தில் துணை ராணுவம், தமிழக போலீசாருடன் இணைந்து நடந்த போலீஸ் கொடி அணிவகுப்பை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் துவக்கி வைத்தார்.
புதுச்சேரியில் பதற்றமான ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள பகுதியில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடத்துவதற்காக, போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். கோரிமேடு, கதிர்காமம் பகுதியில் நேற்று போலீஸ் மற்றும் துணை ராணும், தமிழக சிறப்பு பிரிவு போலீசார் பங்கேற்ற போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது.
வழுதாவூர் சாலை, கதிர்காமம் பஸ் நிறுத்தில் துவங்கிய போலீஸ் கொடி அணிவகுப்பை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் துவக்கி வைத்தார். சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா, எஸ்.பி., வீரவல்லவன், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோரிமேடு, மேட்டுப்பாளையம்,ரெட்டியார்பாளயைத்தில் உள்ள பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள பகுதியான மேட்டுப்பாளையம் சாணரப்பேட்டை, மீனாட்சிபேட்டை, கதிர்காமம், சொக்கநாதன்பேட்டை, உழவர்கரை பகுதி வழியாக கொடி அணிவகுப்பு நடந்தது. இதில், மேட்டுப்பாளையம் வரை கலெக்டர் குலோத்துங்கனும், சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யாவும் போலீசாருடன் நடந்து சென்றனர்.

