/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நள்ளிரவில் பெட்ரோல் திருட்டு மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்
/
நள்ளிரவில் பெட்ரோல் திருட்டு மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்
நள்ளிரவில் பெட்ரோல் திருட்டு மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்
நள்ளிரவில் பெட்ரோல் திருட்டு மர்ம நபர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்
ADDED : மே 10, 2024 01:33 AM
புதுச்சேரி: உருளையன்பேட்டை பகுதியில் நள்ளிரவில் பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களை திருடும் கும்பலை பிடிக்க சி.சி.டி.வி., கேமராக்களை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
உருயைன்பேட்டை பகுதியில் புதிய பஸ் நிலையம் உள்ளது. சுற்றுலா பயணிகள் வெளி மாநிலங்களில் புதுச்சேரிக்கு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் உருளையன்பேட்டை பகுதியில் உள்ள விடுதிகளில் தங்குகின்றனர். மேலும், விடுதிகளில் தங்குபவர்கள், தங்களின் பைக்குகளை விடுதி அருகே சாலையோரங்களில் நிறுத்துகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சாலையோரத்தில் நிற்கும் இருசக்கர வாகனங்களிலிருந்து மர்ம கும்பல் நள்ளிரவில் பெட்ரோல் திருடுவதும், விடுதிகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் காயவைக்கும் துணிகளை திருடும் தொடர் சம்பவம் நடந்து வருகிறது.
மேலும், புதிய பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் நிற்கும் ஆட்டோக்களில் இருந்து பொருட்களை மர்ம கும்பல் எடுத்து செல்லும் சம்பவம் நடக்கிறது. இது பற்றி, உருளயைன்பேட்டை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளது. அயைதடுத்து, உருயைன்பேட்டை போலீசார், நள்ளிரவில் திருடும் கும்பலை பிடிக்க, அப்பகுதியில் உள்ளிவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மர்ம கும்பலை பிடிக்க உருளையன்பேட்டை, மறைமலையடிகள் சாலை பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.