ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கிய 3 பேருக்கு போலீசார் வலை
ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கிய 3 பேருக்கு போலீசார் வலை
ADDED : ஜூலை 19, 2026 08:32 PM
புதுச்சேரி: முன்விரோதம் காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் அவரது தாயை கத்தியால் கிழித்த 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நைனார்மண்டபம், நாகம்மாள் நகரைச் சேர்ந்தவர் கண்ணன், 39; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், அதேப் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவரும் இடையே செடல் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் உள்ளது.
நேற்று முன்தினம் கண்ணன் வீட்டிற்கு வந்த ஆனந்த், அரியாங்குப்பத்தை சேர்ந்த சூர்யா மற்றும் பிரகாஷ் ஆகியோர் அவரை வெளியே அழைத்து தகராறில் ஈடுபட்டனர்.
இதைகண்ட கண்ணின் தாய் தடுக்க வந்தபோது, ஆனந்த் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் கண்ணன் மற்றும் அவரது தாயை கையில் கிழித்துவிட்டு, கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து மூவரையும் தேடி வருகின்றனர்.
