/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீசார்- பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்
/
போலீசார்- பொதுமக்கள் நல்லுறவு கூட்டம்
ADDED : செப் 02, 2024 01:11 AM
திருக்கனுார் : திருக்கனுார் போலீசார்- பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் கைக்கிலப்பட்டு கிராமத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் பிரியா முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், கிராமத்தை சேர்ந்த மகளிர் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் பிரியா, பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான போக்சோ சட்டம் மற்றும் அதற்கான தண்டனை விவரங்கள், போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார்.
பின்னர், இன்ஸ்பெக்டர் ராஜகுமார் பேசுகையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் மொபைல் போன் தருவதை தவிர்ப்பதுடன், அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்.
இப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்வது, இளைஞர்கள் யாரேனும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது தெரியவந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முக்கிய வீதி சந்திப்புகளில் சி.சி.டி.வி., கேமரா பொருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.