/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலித்தீன் கம்பெனி நடத்தியவர் தற்கொலை
/
பாலித்தீன் கம்பெனி நடத்தியவர் தற்கொலை
ADDED : மே 16, 2024 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்தவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முத்தரையர்பாளையம் அசோகன் வீதியை சேர்ந்தவர் தமிழரசன், 41; பாலித்தீன் கம்பெனி நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடந்த 6 மாதங்களாக தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், அவர், சில மாதங்களாக வீட்டில் உள்ளவர்களிடம் பேசாமல் அதிகமாக மது குடித்து வந்தார்.
நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

