ADDED : ஜூலை 28, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
: அரியாங்குப்பம்: ஆடி பவுர்ணமியையொட்டி, சொர்ணா பைரவர் கோவிலில், சேஷாத்ரி சுவாமிக்கு குரு பாதுகா பூஜை நடக்கிறது.
அரியாங்குப்பம் அடுத்த நாணமேடு சொர்ணா பைரவர் கோவில் உள்ளது. இங்கு, வளர்பிறை மற்றும் தேய்பிறை தினத்தில் யாகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. இந்நிலையில், ஆடிப்பவுர்ணமியை முன்னிட்டு, இன்று (29ம் தேதி) மாலை 5:30 மணியளவில் சேஷாத்ரி சுவாமிக்கு குரு பாதுகா பூஜை நடக்கிறது.
