/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்துறை தனியார் மயமாக்கல் விவகாரம்; அமைச்சர் - காங்., எம்.எல்.ஏ., கடும் வாக்குவாதம்
/
மின்துறை தனியார் மயமாக்கல் விவகாரம்; அமைச்சர் - காங்., எம்.எல்.ஏ., கடும் வாக்குவாதம்
மின்துறை தனியார் மயமாக்கல் விவகாரம்; அமைச்சர் - காங்., எம்.எல்.ஏ., கடும் வாக்குவாதம்
மின்துறை தனியார் மயமாக்கல் விவகாரம்; அமைச்சர் - காங்., எம்.எல்.ஏ., கடும் வாக்குவாதம்
ADDED : ஆக 08, 2024 02:00 AM
புதுச்சேரி : சட்டசபை பட்ஜெட் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன் பேசியதாவது:
சட்டசபையில் மின் துறை தனியார்மயம் ஆகாது என்று சொன்னீர்கள். ஆனால் மின் துறை தனியார்மய டெண்டர் கோருவதற்காக நீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்டுள்ளது. எதற்கு இந்த இரட்டை நிலைப்பாடு. ஏற்கனவே ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இப்போது மின் மீட்டரை பிரிபெய்டு மீட்டராக மாற்றினால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
அமைச்சர் நமச்சிவாயம்: நீங்கள் உண்மைக்கு மாறான தகவல்களை கூறக்கூடாது. கடந்த காங்., ஆட்சியில் தான் கமலக்கண்ணன் துறை அமைச்சராக இருந்தபோது தான் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டது. 40 ஆயிரம் சீனா மீட்டர்களை கொள்முதல் செய்து, நகர பகுதியின் பொருத்தினர். வெளியில் கேள்வி பட்டதையெல்லாம் அவையில் சொல்ல கூடாது.
வைத்தியநாதன்: குஜராத்தை சேர்ந்தவர் தான் புதுச்சேரி மின் துறையை டெண்டர் எடுக்க வேண்டுமா. உள்ளூரில் யாரும் இல்லையா. வெளி மாநிலத்தினை சேர்ந்தவர்களுக்கு மின் துறையை தாரை வார்க்க பார்க்கின்றீர்கள். இப்போது விவசாயிகளுக்கு சூரிய ஒளி மின்சாரம் தர உள்ளதாக அறிவித்து உள்ளீர்கள். அப்படியென்றால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தினை நிறுத்த போகிறீர்களா?
அமைச்சர் நமச்சிவாயம்: விவசாயிகள் மின்சாரத்தை நிறுத்தப்போவதாக எங்குமே பட்ஜெட்டில் நாங்கள் சொல்லவில்லை. இலவச மின்சாரத்தை நிறுவதற்கான ஆதாரத்தை உங்களால் காட்ட முடியுமா? கற்பனைக்கு வந்ததையெல்லாம் சொல்ல வேண்டாம்.
வைத்தியநாதன்: இலவச மின்சாரத்தை நிறுத்துவீர்களா என்று தான் கேட்டேன். விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றால் மகிழ்ச்சி தான்.