/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.பார்ம் படிப்பிற்கு விண்ணப்பம் கலந்தாய்வுக்கு முன்னுரிமை
/
பி.பார்ம் படிப்பிற்கு விண்ணப்பம் கலந்தாய்வுக்கு முன்னுரிமை
பி.பார்ம் படிப்பிற்கு விண்ணப்பம் கலந்தாய்வுக்கு முன்னுரிமை
பி.பார்ம் படிப்பிற்கு விண்ணப்பம் கலந்தாய்வுக்கு முன்னுரிமை
ADDED : ஆக 03, 2024 11:37 PM
நீட் மதிப்பெண் அல்லாத படிப்புகளுக்கு சென்டாக் முதற்கட்ட கவுன்சிலிங் நடத்தியது. இதில், 40 சதவீத இடங்கள் நிரம்பியது. முதற்கட்ட கலந்தாய்வில் நிரம்பாத இடங்களுக்கு அடுத்து, இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் நடத்த சென்டாக் தயாராகி வருகிறது. வரும் 7ம் தேதி மாலை 5:00 மணிக்குள் கல்லுாரி, மற்றும் படிப்புகளை முன்னுரிமை கொடுக்க வேண்டும் என, சென்டாக்அறிவுறுத்தியுள்ளது.
'நீட்' மதிப்பெண் அல்லாத படிப்புகளின் கீழ் பி.பார்ம் படிப்பு வருகிறது. மற்ற படிப்புகளுக்கு முதற்கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட்டுள்ள போதிலும், பி.பார்ம் படிப்பிற்கு இதுவரை ஒரு கவுன்சிலிங் நடத்தப்படவில்லை.
ஏற்கனவே இவர்கள் முதற்கட்ட கவுன்சிலிங்கிற்கு ஆன்லைனில் கல்லுாரி, படிப்புகளை முன்னுரிமை கொடுத்து காத்திருக்கிற சூழ்நிலையில் மீண்டும் 2ம் கட்ட கவுன்சிலிங்கிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமா என்ற குழப்பம், பெற்றோர் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இது குறித்த சென்டாக் அதிகாரிகள் கூறுகையில், 'நீட் மதிப்பெண்சேர்க்கை இல்லாத படிப்புகளில் கீழ் பி.பார்ம்வருகிறது. இப்படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் மற்ற படிப்புகளையும் சேர்த்து தான் முதற்கட்ட கலந்தாய்வின்போது முன்னுரிமை கொடுத்துஇருப்பார்.
எனவே முதற்கட்ட கலந்தாய்வு முடித்துவிட்டதால் பி.பார்ம் படிப்பிற்கு மாணவர்கள் கொடுத்த முன்னுரிமையும் தானாகவே ரத்தாகி விடும். எனவே பி.பார்ம் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள்,இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கிற்கு மீண்டும் புதிதாக முன்னுரிமை கொடுக்க வேண்டும். இல்லையெனில் சீட் ஒதுக்கப்படாது' என்றனர்.