/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் ரங்கசாமிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
/
முதல்வர் ரங்கசாமிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
ADDED : ஆக 05, 2024 04:40 AM

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின், 75வது பிறந்தநாள் விழாவில், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ரங்கசாமியின், 75வது பிறந்த நாளையொட்டி திலாசுப்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் தொண்டர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதைத்தொடர்ந்து, நேற்று காலை ஜனாதிபதி திரவுபதி முர்மு, தொலைபேசி மூலம், முதல்வர் ரங்கசாமியை தொடர்பு கொண்டு, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் மனோகர் லால், நிதின் கட்கரி, ஹிமந்தா பிஸ்வா சர்மா, மான்சுவிக் மாண்டியா, முருகன் மற்றும் முன்னாள் கவர்னர் தமிழிசை ஆகியோர், எக்ஸ் தளத்தில் முதல்வர் ரங்கசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
நேற்று காலை முதல்வர் ரங்கசாமி கதிர்காமம், கதிர்வேல் சுவாமி கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார். பின் திலாஸ்பேட்டை அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில், தீபாராதனை காண்பித்து, சிறப்பு பூஜை செய்தார்.
பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து, முதல்வருக்கு கவர்னர் ராதாகிருஷ்ணன், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய் சரவணன்குமார், திருமுருகன், துணைசபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன், முன்னாள் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணராவ் மற்றும் பன்னீர் செல்வம் ஆகியோர் முதல்வர் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்தும், மலர்க்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
தலைமை செயலர் சரத்சவுகான் தலைமையில், அனைத்து அரசு செயலர்கள் முதல்வரை அவரது இல்லத்தில், நேரில் சந்தித்து பிறந்து நாள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.