ADDED : ஆக 04, 2026 05:25 PM

புதுச்சேரி: பதவி உயர்வு, நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தில் அரசு கல்லுாரி பேராசிரியர்கள் உயர்கல்வித் துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களிலும், ஏழு அரசு கல்லுாரிகள் உள்ளன. இதில் கடந்த 2002ம் ஆண்டு முதல், யு.பி.எஸ்.சி., சார்பில், தேர்தெடுக்கப்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுச்சேரி உயர்கல்வித் துறை பணி உயர்வு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வழங்கவில்லை. தற்போது, அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு மூலம், பதவி உயர்வு அளிக்க முடியும். ஆனால் பலர் பதவி உயர்வு பெறமால் ஓய்வு பெற்றுவிட்டனர்.
எனவே, பதவி உயர்வை முன்தேதியிட்டு வழங்க வேண்டும். அந்த தேதியிலிருந்து, நிலுவைத் தொகையை அளிக்க வேண்டும், என, பேராசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்னறர். இந்நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து, லாஸ்பேட்டை தாகூர் அரசு கலைக்கல்லுாரி, காஞ்சிமாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வாசலில், பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, லாஸ்பேட்டையில் உள்ள உயர்கல்வி இயக்குனர் அலுவலக வாயிலில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றாவிட்டால், இது காலவரையற்ற போராட்டமாக தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.
