நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: கலிதீர்த்தாள்குப்பத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அங்காளன் எம். எல் .ஏ., நிவாரண உதவிகள் வழங்கினார்.
புதுச்சேரி மதகடிப்பட்டு அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் திருக்கானுார் சாலையை சேர்ந்தவர் வெற்றிவேல் மனைவி கம்சலா. கணவரை இழந்த இவர், கூலி வேலை செய்து வருகிறார்.
கடந்த 1ம் தேதி காலை, வேலைக்கு சென்ற நிலையில், இவரது கூரை வீடு தீப்பற்றி எரிந்தது. இதில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
தகவல் அறிந்த அங்காளன் எம்.எல்.ஏ., தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கி, ஆறுதல் கூறினார்.