/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.ஆர்.டி.சி., செமி டீலக்ஸ் பஸ் சேவை புதுச்சேரி - குமுளி இடையே துவக்கம்
/
பி.ஆர்.டி.சி., செமி டீலக்ஸ் பஸ் சேவை புதுச்சேரி - குமுளி இடையே துவக்கம்
பி.ஆர்.டி.சி., செமி டீலக்ஸ் பஸ் சேவை புதுச்சேரி - குமுளி இடையே துவக்கம்
பி.ஆர்.டி.சி., செமி டீலக்ஸ் பஸ் சேவை புதுச்சேரி - குமுளி இடையே துவக்கம்
ADDED : மே 01, 2024 01:11 AM

புதுச்சேரி, : புதுச்சேரி - குமுளி இடையே, பி.ஆர்.டி.சி., சார்பில், 2 புதிய பஸ்கள் இன்று 1ம் தேதி முதல் இயக்கப்படுகிறது.
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகமான பி.ஆர்.டி.சி.,யில், 15 ஆண்டிற்கு மேல் பயன்பாட்டில் இருந்த பஸ்கள் கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த பட்ஜெட்டில் ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டு, புதிய பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டது.
இதில், 38 பஸ்கள் வாங்கப்பட்டு பாடி கட்டும் பணி நடந்து வந்தது. பணிகள் முடிந்த பஸ்களுக்கு பர்மிட் பெறும் பணிகள் நடந்து வருகிறது. அதற்காக பஸ்கள் பாரதி மில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது, புதுச்சேரி - குமுளி இடையே 2+2 இருக்கை வசதியுடன் கூடிய செமி டீலக்ஸ் 2 பஸ்கள் இன்று 1ம் தேதி துவக்கி வைக்கப்படுகிறது. சபரிமலை செல்லும் பக்தர்கள் மற்றும் கொடைக்கானல், மூணாறு, தேக்கடி, வாகமன் செல்வோருக்கு இந்த பஸ்கள் பெரிதும் உதவும்.
புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தினசரி மாலை 5:00 மணிக்கு பஸ் புறப்படுகிறது. மறுமார்க்கத்தில் குமுளியில் இருந்து தினசரி மாலை 5:00 மணிக்கு ஒரு பஸ் புறப்படுகிறது.
புதுச்சேரியில் இருந்து புறப்படும் பஸ் கடலுார், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், வத்தலகுண்டு, பெரியகுளம், தேனி, உத்தமபாளையம், கம்பம், கூடலுார் வழியாக குமுளியை சென்டையும்.
புதுச்சேரி - குமுளிக்கு ரூ.450, தேனிக்கு ரூ. 390, கம்பம் செல்ல ரூ. 420 கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இந்த பஸ்களுக்கான டிக்கெட்டுகளை புதிய பஸ் நிலையத்தில் உள்ள பி.ஆர்.டி.சி., முன்பதிவு கவுன்டரிலும், www.prtc.in மற்றும் பஸ் இந்தியா ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.