தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் நாளை துவக்கம்

பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் நாளை துவக்கம்

பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் நாளை துவக்கம்


ADDED : ஏப் 07, 2024 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2024 04:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில், பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை முகாம், நாளை துவங்குகிறது.

இது குறித்து முதன்மை பொதுமேலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற் பனை மேளா முகாம் மேட்டுப்பாளையம், முதலியார்பேட்டை தபால் நிலைய அலுவலகம் அருகில், திருக்கனுார், பாகூர், கோட்டக்குப்பம் இந்தியன் வங்கி அருகில், அரும்பார்த்தபுரம், கொம்பாக்கம், மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி அருகில், வில்லியனுார் மற்றும் ரங்கபிள்ளை வீதி பொது தொலைபேசி நிலையம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

வாடிக்கையாளர்கள் தங்களுடைய தற்போதைய, எண்ணை மாற்றாமல், அதிவேக எப்.டி.டி.எச்., தொழில்நுட்பத்திற்கு தங்கள் லேண்ட் லைன் எண்ணை இலவசமாக மாற்றி கொள்ளலாம். அதற்கான மோடம் முற்றிலும் இலவசம்.

புதிய எப்.டி.டி.எச்., இணைப்பு, ரூ.329, முதல் கிராமப்புறங்களில் ஆறு மாதங்களுக்கு, ரூ.999 க்கு கிடைக்கும். ரூ.269, மதிப்புள்ள சிம்கார்டு, ரூ.50,க்கு கிடைக்கும். இந்த சிம்கார்டில், 45 நாட்களுக்கு தினசரி 2 ஜி.பி., டேட்டா, அளவில்லாமல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்.எம்.எஸ் இலவசம்.

பிற நெட்வொர்க்கில் இருந்து, பி.எஸ்.என்.எல்., வருபவர்களுக்கு ரூ.269 மதிப்புள்ள சிம் இலவசம். தற்போதுள்ள 2ஜி, 3ஜி, சிம் வைத்திருப்பவர்கள் இலவசமாக, 4 ஜி, சிம்மிற்கு மேம்படுத்தி கொள்ளலாம்.

மூன்று நாட்கள் நடக்கும் இம்முகாம் வரும், 10ம் தேதி நிறைவு பெறுகிது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us