/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'லீவுக்கு பீஸ்' கேட்ட விவகாரம் புதுச்சேரி டி.ஜி.பி., விசாரணை
/
'லீவுக்கு பீஸ்' கேட்ட விவகாரம் புதுச்சேரி டி.ஜி.பி., விசாரணை
'லீவுக்கு பீஸ்' கேட்ட விவகாரம் புதுச்சேரி டி.ஜி.பி., விசாரணை
'லீவுக்கு பீஸ்' கேட்ட விவகாரம் புதுச்சேரி டி.ஜி.பி., விசாரணை
ADDED : மே 25, 2024 12:57 AM
புதுச்சேரி: 'லீவு கேட்ட ஐ.ஆர்.பி.என்., போலீஸ்காரரிடம் உதவி கமாண்டர் 'பீஸ்' கேட்ட விவகாரம் குறித்து டி.ஜி.பி., விசாரணை நடத்தினார்.
புதுச்சேரி ஐ.ஆர்.பி.என். போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பல விதங்களில் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், மருத்துவ விடுப்பு கேட்ட ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரரிடம், உதவி கமாண்டர் 'பீஸ்' (விலைமாது) கேட்ட ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியதால், போலீஸ் துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டிய கமாண்டர் சுவாதிசிங் விடுமுறையில் உள்ளார். அதனைத் தொடர்ந்து டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ், கமாண்டர் பொறுப்பு வகிக்கும் சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யாவை அழைத்து விசாரித்தார்.
இந்நிலையில், இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட உதவி கமாண்டர் நேற்று மதியத்திற்கு பிறகு அலுவலகத்தில் இருந்து மாயமானார். அவரது மொபைல் போனும், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.