ADDED : ஆக 08, 2024 12:30 AM
புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் கடந்த, 1953ம் ஆண்டு மே மாதம், 25ம் தேதி பிறந்தவர். கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், வடகரை பகுதியை சேர்ந்தவர். இவர் சென்னை பல்கலையில் எம்.எஸ்சி., வேதியியலும், வேல்ஸ் பல்கலையில், எம்.ஏ., பொருளாதாரம் படித்தவர்.
இவரது தந்தை அஞ்சல்துறையில் தமிழகத்தின் ஊட்டியில் பணிபுரிந்தார். அதனால் அவர் அந்த பகுதியில் தான் வளர்ந்தார். கடந்த, 1979ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பேட்ச் அதிகாரியான கைலாஷ்நாதன், குஜராத்தில் கடந்த, 1981ம் ஆண்டில், உதவி கலெக்டராக பணியில் சேர்ந்தார்.
தொடர்ந்து கலெக்டர் உள்ளிட்ட, பல்வேறு பதவிகளில் பணியாற்றிய இவர், பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்த போது, கடந்த, 2013-14ம் ஆண்டு முதன்மை தலைமை செயலராக பணி புரிந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகும், கடந்த ஜூன் மாதம் வரை குஜராத்தில் முதன்மை செயலராக தொடர்ந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.