/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மழைநீர் வடிகால் பணி: எம்.எல்.ஏ., ஆய்வு
/
மழைநீர் வடிகால் பணி: எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : ஜூலை 24, 2024 06:19 AM

புதுச்சேரி : உப்பளம் தொகுதியில் மழைநீர் வடிவதற்கு அமைக்கப்பட்டு வரும் வாய்க்கால் பணியை, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட சுப்பையா சாலை, மகாத்மா காந்தி வீதி, ஆம்பூர் சாலை, புஸ்ஸி வீதி, டாக்டர் அம்பேத்கர் சாலை ஆகிய இடங்களில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஆம்பூர் சாலையில், சந்தா சாஹிப் சந்திப்பில், மழைநீர் வடிவதற்கு 'யு' வடிவ வாய்க்கால் அமைத்து, அதை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணியை நேற்று, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். அவருடன், தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் நிசார், கிளை செயலாளர் ராகேஷ், கழக சகோதரர்கள் மோரிஸ், ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.