/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அந்தஸ்து விவகாரத்தில் நமச்சிவாயம் வாக்குறுதி மாஜி எம்.பி., ராமதாஸ் வரவேற்பு

ADDED : ஏப் 07, 2024 04:19 AM
புதுச்சேரி : மாநில அந்தஸ்து விவகாரத்தில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் வாக்குறுதியை, புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் வரவேற்றுள்ளது.
அதன், தலைவரும், முன்னாள் எம்.பி., யுமான ராமதாஸ் அறிக்கை:
புதுச்சேரி மாநில அந்தஸ்து பெறுவதும், நிதிக் கமிஷனில் புதுச்சேரி சேர்ப்பதும் தனது முக்கிய வாக்குறுதிகளாக பா.ஜ., வேட்பாளர் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
இந்த வாக்குறுதி இப்போது உள்ள கட்சித் தலைவர்களின் அனுமதி பெற்று அளிக்கப்பட்டதா என, தெரியவில்லை.
பிரதமரும் உள்துறை அமைச்சரும் புதுச்சேரி மாநில அந்தஸ்து வழங்க தயாராக இருக்கிறார்களா. இதுதான் இப்பிரச்னையின் மிக முக்கியக் கேள்வி.
நீதிமன்றத்தில் புதுச்சேரி எங்கள் சொத்து. அதை எப்படி வேண்டுமானாலும் நாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என, கூறும் மத்திய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தந்து விடுமா. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் டில்லிக்கும் அதை கொடுக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு உடன்படுமா என, தெரியவில்லை.
ஒருவேளை பா.ஜ.,வின் தேசியத் தேர்தல் அறிக்கையில் அடுத்த ஓராண்டுக்குள் புதுச்சேரியை மாநிலம் ஆக்குவோம் என்ற வாக்குறுதியை அளித்தால் நாம் நம்பலாம்.
இல்லையென்றால் வழக்கம் போல இந்த வாக்குறுதியும் பழைய கள்ளை பழைய மொந்தையில் ஊற்றியது போல என, நினைக்க வேண்டி இருக்கும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.