/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராமலிங்கம் எம்.ஏல்.ஏ., ஓட்டு சேகரிப்பு
/
ராமலிங்கம் எம்.ஏல்.ஏ., ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 17, 2024 11:53 PM

புதுச்சேரி : ராஜ்பவன் தொகுதியில் பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஓட்டு சேகரித்தார்.
புதுச்சேரியில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து, ராஜ்பவன் தொகுதி, குருசுக்குப்பம் பகுதியில் பா.ஜ.,வினர் ஓட்டு சேகரித்தனர். ராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமையில் கூட்டணி கட்சியினர் ஓட்டு சேகரித்தனர். அவருக்கு, நாகராஜன், சீனு ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து, வைத்திக்குப்பம், வடக்கு பகுதி, பச்சைவாழியம்மன் கோவில் வீதி, வன்னியர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டுகள் சேகரித்தனர். ராஜ்பவன் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஆனந்த கண்ணன், பிரபாவதி, தொகுதி நிர்வாகிகள் கதிரவன், அருண்குமார், தேவநாதன், ரவி, கருணாகரன், உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

