/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாஜி முதல்வர் நாராயணசாமியுடன் ரவிக்குமார் எம்.பி., சந்திப்பு
/
மாஜி முதல்வர் நாராயணசாமியுடன் ரவிக்குமார் எம்.பி., சந்திப்பு
மாஜி முதல்வர் நாராயணசாமியுடன் ரவிக்குமார் எம்.பி., சந்திப்பு
மாஜி முதல்வர் நாராயணசாமியுடன் ரவிக்குமார் எம்.பி., சந்திப்பு
ADDED : மே 25, 2024 04:06 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமியை, ரவிக்குமார் எம்.பி., சந்தித்தார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரலில் நடந்த லோக்சபா தேர்தலில், விழுப்புரம் தொகுதியில், இண்டியா கூட்டணி சார்பில், வி.சி.,பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி போட்டியிட்டார். அப்போது அவருக்கு ஆதவராக, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பிரசாரம் செய்தார். இந்த நிலையில், ரவிக்குமார் நேற்று நாராயணசாமியை சந்தித்து, சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''பிரதமர் மோடியின் ஒவ்வொரு நாள், பேச்சும் பா.ஜ.,வுக்கு ஒவ்வொரு தொகுதியாக இழக்க செய்கிறது. பா.ஜ., வெற்றிக்கு காரணமான அவரே, அக்கட்சியின் தோல்விக்கும் காரணமாகி விட்டார்,'' என்றார்.
இது குறித்து, முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், ''நான் ஒரு அவதார புருஷன் என்று பிரதமர் பேச ஆரம்பித்து விட்டார். எல்லோரும் கடவுளால் தான் அனுப்பப்பட்டவர்கள். அவர் ஏதோ புதிய பிறவி போல் பேசுகிறார். கொள்கையை பற்றி பேசாமல் தரம் புரண்டு பிரதமர் பேசுகிறார்,'' என்றார்.

