/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீண்டும் இலவச எடை மேடை நுகர்வோர் இயக்கம் கோரிக்கை
/
மீண்டும் இலவச எடை மேடை நுகர்வோர் இயக்கம் கோரிக்கை
ADDED : ஆக 20, 2024 05:11 AM

புதுச்சேரி: வணிக வளாகங்களில் மீண்டும் இலவச எடை மேடை வைக்க வேண்டும் என, அகில பாரதீய கிராஹக் பஞ்சாயத்து நுகர் வோர் விழிப்புணர்வு இயக்கம் அரசை வலியுறுத்தியுள்ளது.
அகில பாரதீய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தலைமையில் நிர்வாகிகள், சப் கலெக்டர் வினயராஜை சந்தித்து மனு அளித்தனர்.
அதில், புதுச்சேரியில் நேரு வீதி, காந்தி வீதி, மிஷன் வீதி, செட்டி தெரு, கொசக்கடை தெரு, பாரதி வீதி, சின்னசுப்பிராயப் பிள்ளை வீதி, ரங்கப் பிள்ளை வீதி ஆகிய இடங் களில் அதிக வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த வீதிகள் நகரின் முக்கிய வியாபார இடமாகவும் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பொருட்கள் வாங்கும் சூழ்நிலையில், கடைகளில் எடை சரியாக உள்ளதா என்ற சந்தேகம் நுகர்வோர்களுக்கு எழுந்துள்ளது.
கடந்த 1990ம் ஆண்டு புதுச்சேரி அரசால் பொதுமக்கள் வாங்க கூடிய பொருட்களின் எடையை இலவசமாக பரிசோதித்து கொள்ள, வணிக வளாகங்களில் இலவச எடை மேடை அமைக்கப்பட்டது.
காலபோக்கில் இது அப்புறப்படுத்தப்பட்டுவிட்டது. எனவே, நுகர்வோர் நலன் கருதி மீண்டும் இலவச எடை மேடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
ரக் ஷா பந்தன்
புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த அகில பாரதீய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க நிர்வாகிகள் இந்து அறநிலைய துறை, வருவாய் துறை அதிகாரிகளுக்கு, ரக் ஷா பந்தனையொட்டி கைகளில் ராக்கி கயிறு கட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

