ADDED : மே 27, 2024 05:21 AM
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கல்மண்டபம் காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் சமுதாய நலக்கூடம் இல்லாததால், தங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு, கரியமாணிக்கம், மடுகரை, சூரமங்லகம் பகுதிகளில் உள்ள தனியார் திருமண நிலையங்களை தேடி செல்லும் நிலை உள்ளது. அங்கு, வாடகையாக அதிக பணம் செலவு ஆவதால், ஏழைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
காலனி பகுதி மக்களுக்கு சமுதாய நலக்கூடம் கட்டித்தரப்படவில்லை இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
காலனி பகுதி மக்களுக்கு சமுதாய நலக்கூடம் கட்டித்தந்தால் நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும், ஆகையால் கல்மண்டபம் காலனி பகுதி மக்கள் பயன்பெரும் வகையில், சமுதாயநலக்கூடம் கட்டித்தர நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

