தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓய்வு பெற்ற ஆசிரியர் சாலை விபத்தில் பலி

ஓய்வு பெற்ற ஆசிரியர் சாலை விபத்தில் பலி

ஓய்வு பெற்ற ஆசிரியர் சாலை விபத்தில் பலி


ADDED : ஜூலை 30, 2026 05:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2026 05:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: சாலை விபத்தில், ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கதிர்காமம், ராதாக்கிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் அசோகன் 64; ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர். இவர் கடந்த 27ம் தேதி சிலம்பிமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். அன்று மாலை அங்கிருந்து புறப்பட்டு தனது ஹீரோ ஹோண்டா பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

புதுச்சேரி – கடலுார் சாலை, இடையார்பாளையம் சந்திப்பு அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்தார்.

ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். அவரது மகன் விவேக் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us