/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தல் ஓட்டுப்பதிவால் வெறிச்சோடிய சாலைகள்
/
தேர்தல் ஓட்டுப்பதிவால் வெறிச்சோடிய சாலைகள்
ADDED : ஏப் 20, 2024 06:08 AM

புதுச்சேரி: புதுச்சேரியில், தேர்தல் ஓட்டுப்பதிவு காரணமாக வாகன போக்குவரத்து இன்றி, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
புதுச்சேரியில் நேற்று காலை 7:00 மணி முதலே ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக துவங்கியது. நகர மற்றும் கிராம பகுதியில் வெயிலில் இருந்து தப்பிப்பதிற்காக காலை 7:00 மணிக்கே ஏராளமான வாக்காளர்கள் வரிசையில் நின்று ஓட்டளித்தனர்.
ஓட்டு பதிவுக்காக புதுச்சேரி முழுதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டது. புதுச்சேரி முழுதும் சில தனியார் பஸ்களும், ஒன்றிரண்டு பி.ஆர்.டி.சி. பஸ்கள் மட்டுமே இயங்கின. மற்ற அனைத்து தனியார் பஸ்களும் நேற்று இயங்கவில்லை.
முக்கிய வணிக நிறுவனங்கள் உள்ள அண்ணா சாலை, நேரு வீதிகளில் கடைகள் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

