/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் சைனிக் பள்ளி செல்வகணபதி எம்.பி., கோரிக்கை
/
புதுச்சேரியில் சைனிக் பள்ளி செல்வகணபதி எம்.பி., கோரிக்கை
புதுச்சேரியில் சைனிக் பள்ளி செல்வகணபதி எம்.பி., கோரிக்கை
புதுச்சேரியில் சைனிக் பள்ளி செல்வகணபதி எம்.பி., கோரிக்கை
ADDED : ஆக 01, 2024 06:25 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் சைனிக் பள்ளி துவங்க செல்வகணபதி எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர், ராஜ்யசபாவில் பேசியதாவது:
சைனிக் பள்ளிகள், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள சைனிக் பள்ளி சங்கத்தால் நிறுவப்பட்டு நிர்வகிக்கப்படும் இந்தியாவில் உள்ள பொதுப் பள்ளிகளின் அமைப்பாகும். தேசிய பாதுகாப்பு அகாடமி, இந்திய கடற்படை அகாடமி மற்றும் விமானப்படை அகாடமி ஆகியவற்றில் நுழைவதற்கு மாணவர்களை கல்வி, மனம் மற்றும் உடல் ரீதியாக தயார்படுத்துவதே அந்த பள்ளிகளின் முதன்மை நோக்கம்.
புதுச்சேரி மக்கள் தொகையில், அதிகளவில் இளம் குழந்தைகள் உள்ளனர். கல்வியறிவு விகிதம், 86 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
குடியிருப்பு சைனிக் பள்ளி தொடங்கப்பட்டால், தேசப் பாதுகாப்பில் பங்களிக்க புதுச்சேரி மக்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும். புதுச்சேரி அரசு சைனிக் பள்ளி நடத்த நிலம், உள்கட்டமைப்பு போன்ற வசதிகளை செய்து கொடுக்க முன்வரும்.
இந்த பள்ளியைத் திறப்பதன் மூலம், முக்கியமாக எஸ்.சி., எஸ்.டி., புதுச்சேரியில் வசிப்பவர்கள், இந்த நாட்டிற்கு சேவை செய்த ஆயுதப்படை ஊழியர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு கொள்கையை நிலைநிறுத்தும்.
புதுச்சேரி மக்களின் நலன் கருதி, மத்திய அரசு ஒரு குடியிருப்பு சைனிக் பள்ளியைத் தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.