/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குட்கா பொருட்கள் விற்பனை; கடை உரிமையாளர் கைது
/
குட்கா பொருட்கள் விற்பனை; கடை உரிமையாளர் கைது
ADDED : ஏப் 27, 2024 04:25 AM
பாகூர் : கிருமாம்பாக்கம் அருகே மளிகை கடையில் விற்பனை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருமாம்பாக்கம் அடுத்த கன்னியக்கோவில் பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் நேற்று காலை கன்னியக்கோவில் - மணப்பட்டு சாலையில் உள்ள ஒரு மளிகை கடையில் திடீர் சோதனை நடத்தினர்.
அதில், அட்டை பெட்டிகளில் பதுக்கி வைத்து குட்கா பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து சிவக்குமார் 45; கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

