தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏலச்சீட்டு மோசடி வழக்கில் சிக்கிய எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' 

ஏலச்சீட்டு மோசடி வழக்கில் சிக்கிய எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' 

ஏலச்சீட்டு மோசடி வழக்கில் சிக்கிய எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்' 


ADDED : மார் 08, 2025 03:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2025 03:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : ஏலச்சீட்டு மோசடி வழக்கில், சிக்கிய சப் இன்ஸ்பெக்டரை 'சஸ்பெண்ட்' செய்து டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு ரயில்வே பாலம் அருகில் ஜே.பி., சிட் பண்ட்ஸ் பெயரில் பிலோமீனா என்பவர், ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். இவரிடம், ஏராளமானோர் சீட்டு கட்டி வந்தனர். அவர்களிடம், சீட்டு எடுத்தவர்களுக்கு பிலோமீனா பணம் தரவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார், பிலோமீனா, அவரது கணவர் பியர்ஜான் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிந்து, பிலோமீனாவை கைது செய்தனர்.

விசாரணையில், பலரை ஏமாற்றி 5 கோடி ரூபாய் வரை வசூல் செய்து திருப்பி தராமல் மோசடி செய்ததும், அதற்கு, கவர்னர் மாளிகையில் டிரைவாக வேலை செய்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிற்றரசன், பிலோமீனாவுக்கு, பின் புலமாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

அதன்பேரில் மோசடி வழக்கில், சப் இன்ஸ்பெக்டர் சிற்றரசன் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து, அவர் கடந்த 26ம் தேதி சென்னை ஐகோர்ட்டில், முன் ஜாமின் பெற்றார்.

இந்நிலையில் சப் இன்ஸ்பெக்டர் சிற்றரசன், மீதான குற்றச்சாட்டு குறித்து துறை ரீதியான விசாரணை நடந்து வந்த நிலையில், அவரை 'சஸ்பெண்ட்' செய்து டி.ஜி.பி., ஷாலினி சிங் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us