/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி ரயில் நிலையத்தில் மோப்ப நாய் மூலம் சோதனை
/
புதுச்சேரி ரயில் நிலையத்தில் மோப்ப நாய் மூலம் சோதனை
புதுச்சேரி ரயில் நிலையத்தில் மோப்ப நாய் மூலம் சோதனை
புதுச்சேரி ரயில் நிலையத்தில் மோப்ப நாய் மூலம் சோதனை
ADDED : ஏப் 27, 2024 04:35 AM

புதுச்சேரி : புதுச்சேரி ரயில் நிலையத்தில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் கஞ்சா கடத்தி வரப்படுகிறதா என, திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.
புதுச்சேரியில் கஞ்சா விற்பனை சர்வ சாதாரணமாக நடக்கிறது. கஞ்சாவை ஒழிக்க போலீசார் பல்வேறு முயற்சிகள் எடுத் தாலும், பல வழிகளில் கஞ்சா புதுச்சேரிக்குள் வந்து விடுகிறது.
இதனால் கஞ்சா கொண்டு வரப்படும் வழிகளை கண்டறிந்து அங்கு போலீசார் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கஞ்சா தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகர், சப்இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் தலைமையிலான போலீசார் நேற்று காலை 11:05 மணிக்கு கச்சிக்கூடாவில் இருந்து புதுச்சேரி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர்.
போதை பொருட்கள் கண்டறியும் மோப்ப நாய் பைரவா துணையுடன் ஒவ்வொரு பெட்டியாக சோதனை நடத்தப்பட்டது. ரயிலில் வந்த பயணிகள் உடமைகள் சோதனை செய்தனர்.
புதுச்சேரிக்கு ஆந்திரா மற்றும் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள மலை கிராமங்களில் இருந்து கஞ்சா கொண்டுவரப்படுகிறது.
இதனால், கச்சிக்கூடா ரயில் மூலம் கஞ்சா கொண்டுவர வாய்ப்பு உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீசார் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர். நேற்றைய சோதனையில், போதை பொருட்கள் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை. இதுபோன்ற சோதனை அடிக்கடி நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

