/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் பகுதியில் சிறப்பு துப்புரவு பணி துவக்கம்
/
பாகூர் பகுதியில் சிறப்பு துப்புரவு பணி துவக்கம்
ADDED : மே 22, 2024 07:01 AM

பாகூர் : பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் சிறப்பு துப்புரவு பணியினை ஆணையர் ரமேஷ் துவக்கி வைத்தார்.
புதுச்சேரி உள்ளாட்சித் துறை இயக்குனர், கோடை வெயில் மற்றும் மழையினால் தொற்று நோய் பரவாமல் தடுக்கும் விதமாக சிறப்பு துப்புரவு பணியை மேற்கொள்ள நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முதல் வரும் ஜூன் 7ம் தேதி வரை சிறப்பு துப்புரவு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சிறப்பு துப்புரவு பணி தொடக்க நிகழ்ச்சி பாகூர் மருத்துவமனை வீதியில் நேற்று நடந்தது. இதில், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தனர்.
பாகூர் கடைவீதி, மருத்துவமனை வீதி உள்ளிட்ட இடங்களில் இருந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆணையர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

