/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கணக்கு மற்றும் கருவூலத் துறையில் ஓய்வூதியர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
/
கணக்கு மற்றும் கருவூலத் துறையில் ஓய்வூதியர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
கணக்கு மற்றும் கருவூலத் துறையில் ஓய்வூதியர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
கணக்கு மற்றும் கருவூலத் துறையில் ஓய்வூதியர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
ADDED : மே 12, 2024 04:42 AM
புதுச்சேரி: வெயில் காலத்தில் ஓய்வூதியர்களுக்கு கணக்கு மற்றும் கருவூலத் துறையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் கருவூலக அலுவலகங்களின் வாயிலாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் 2024ம் ஆண்டிற்கான வாழ்வாதார உறுதி சான்றிதழ் மே மாதம் 2ம் தேதி முதல் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இச்சான்றிதழை நேரில் வந்தோ, முறைப்படி அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள் அளித்த சான்றிதழ் மூலமாகவோ, இந்திய அரசின் ஜீவன் பிரமான் www.jeevapraman.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது தபால் நிலைய அலுவலகத்தின் வாயிற் சேவையை பயன்படுத்தி அனுப்பி வைக்கலாம்.
வாழ்வாதார உறுதி சான்றிதழ் சமர்ப்பிக்க தவறினால், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க இயலாது. வெய்யில் காலத்தில் ஓய்வூதியர்கள் கடும் சிரமங்களை சந்தித்து வரும் சூழ்நிலையில், கணக்கு மற்றும் கருவூலத் துறையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி, பந்தல் போடப்பட்டுள்ளது.
தற்போது ஓய்வூதியம் பெறுபவர்களிடம் ஆதார், பான் எண்கள் பெறப்பட்டு வருகிறது. எனவே, வாழ்வார உறுதி சான்றிதழ் சமர்பிக்க உள்ள ஓய்வூதியர்கள், தங்களுடைய ஓய்வூதிய அட்டை, வங்கி கணக்குக்குடன் உள்ளிட்ட தகவல்களுடன் ஆதார், பான், மொபைல் என், முகவரி உள்ளிட்டவைகளையும் கணக்கு கருவூலத் துறை கொடுக்கும் படிவத்தில் பூர்த்தி செய்து தர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.