ADDED : செப் 08, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: மதிக்கிருஷ்ணாபுரம் பட்டாபிராமர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.
புதுச்சேரி - கடலுார் சாலை மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த பட்டாபிராமர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 8.30 மணிக்கு, விநாயகர் பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு திருமஞ்சனம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.