/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோரிமேடு சோதனை சாவடியில் சீனியர் எஸ்.பி., திடீர் ஆய்வு
/
கோரிமேடு சோதனை சாவடியில் சீனியர் எஸ்.பி., திடீர் ஆய்வு
கோரிமேடு சோதனை சாவடியில் சீனியர் எஸ்.பி., திடீர் ஆய்வு
கோரிமேடு சோதனை சாவடியில் சீனியர் எஸ்.பி., திடீர் ஆய்வு
ADDED : மார் 31, 2024 05:01 AM

புதுச்சேரி : கோரிமேடு சோதனை சாவடியில் சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா நேற்று இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
லோக்சபா தேர்தலையொட்டி, புதுச்சேரி மாநில எல்லைப் பகுதிகளில், சோதனை சாவடிகள் அமைத்து, பறக்கும் படை மற்றும் போலீசார் வாக்காளர்களுக்கு பணம், பரிசுபொருட்கள், மது, போதை பொருட்கள் கடத்தி செல்வதை தடுக்க வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று இரவு சீனியர் எஸ்.பி., நாரசைதன்யா கோரிமேடு மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடியில் திடீர் ஆய்வு செய்தார். அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் கண்காணிப்பு பணியில் கவனமாக இருக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் செயல்பட வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் தமிழகம் மற்றும் வெளி மாநிலத்தவர்கள் புதுச்சேரிக்கு சந்தேகப்படும் படியான நபர்கள் வந்தால் அவர்களின் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்' என்றார்.
ஆய்வின் போது, வாக்காளர் பதிவு அதிகாரி யஷ்வந்தையா, கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

