/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடலில் மூழ்கி மாணவர் பலி: கிருமாம்பாக்கம் அருகே சோகம்
/
கடலில் மூழ்கி மாணவர் பலி: கிருமாம்பாக்கம் அருகே சோகம்
கடலில் மூழ்கி மாணவர் பலி: கிருமாம்பாக்கம் அருகே சோகம்
கடலில் மூழ்கி மாணவர் பலி: கிருமாம்பாக்கம் அருகே சோகம்
ADDED : மார் 15, 2025 06:29 AM

பாகூர்: கிருமாம்பாக்கம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் தமிழரசன் மகன் சபரீஸ்வரன், 13; அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார்.
மாசி மகத்தை முன்னிட்டு நேற்று சபரீஸ்வரன் தனது நண்பர்களுடன் சைக்கிளில் பனித்திட்டு கடற்கரைக்கு சென்று, முகத்துவாரத்தில் குளித்தார். அலையில் சிக்கிய சபரீஸ்வரன் நீரில் மூழ்கி மாயமானார். அவரது நண்பர்கள் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்த மீனவர்கள், பொதுமக்கள் ஓடிவந்து, பைபர் படகு மூலம் தேடினர்.
தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார், பாகூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரத்திற்கு பிறகு சபரீஸ்வரன் சடலமாக மீட்கப்பட்டார். கிருமாம்பாக்கம் போலீசார் சபரீஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.