ADDED : செப் 16, 2024 05:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : அரியூரில் அரசு பள்ளி மாணவர்கள் தாக்கி கொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வில்லியனுார் அடுத்த அரியூரில் தனியார் மருத்துவமனை நுழைவு வாயில் எதிரில் நேற்று முன்தினம் மாலை 20க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் பஸ்சிற்காக காத்திருக்கின்றனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சில மாணவர்கள் திடீரென ஒருவரை ஒருவர் சரமரியாக தாக்கி கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.