/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நர்சிங் நுழைவு தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள் கலக்கம்
/
நர்சிங் நுழைவு தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள் கலக்கம்
நர்சிங் நுழைவு தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள் கலக்கம்
நர்சிங் நுழைவு தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள் கலக்கம்
ADDED : மே 10, 2024 01:36 AM
புதுச்சேரி: இந்திய நர்சிங் கவுன்சில் காலக்கெடு முடிய 36 நாட்கள் மட்டுமே உள்ளதால் நர்சிங் நுழைவு தேர்வினை எதிர்பார்த்து இருக்கும் மாணவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் மதர் தெரசா சுகாதார நிலையம் மட்டுமின்றி,9 தனியார் நர்சிங் கல்லுாரிகள் உள்ளன.இவற்றில், 700க்கும் மேற்பட்ட பி.எஸ்.சி.,நர்சிங் சீட்டுகள் உள்ளன. இதில்,அரசு ஒதுக்கீட்டு இடங்களாக மதர்தெரசா கல்லுாரியில்-80 தனியார் நர்சிங் கல்லுாரியில் 295 என மொத்தம் 375 நர்சிங் சீட்டுகள், சென்டாக் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றது.
இந்தாண்டு நர்சிங் படிப்புகளுக்கு நுழைவு தேர்வு அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இதுவரை நுழைவு தேர்விற்கான பாடத்திட்டம் குறித்து அறிவிப்பு ஏதும் வெளியாகததால் மாணவ மாணவிகள் தவித்து வருகின்றனர்.
இது குறித்து மாணவர்கள் கூறும்போது, புதுச்சேரியில் உள்ள நர்சிங் படிப்புகளுக்கு ஜூன் 15ம் தேதிக்குள் நுழைவு தேர்வு நடத்த வேண்டும்.ஆகஸ்ட் மாதம் 1ம் தேதியில் இருந்து வகுப்புகள் ஆரம்பிக்க வேண்டும். செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்று இந்திய நர்சிங் கவுன்சில் உத்தரவிட்டது.
இது தொடர்பாக ஜனவரி 29 ம்தேதி அறிவிப்பு வெளியிட்டது.ஆனால் கடந்த மாதம், 15ம் தேதி தான் புதுச்சேரியில் நர்சிங் நுழைவு தேர்வு உண்டு என்று அறிவிக்கப்பட்டது.இந்திய நர்சிங் காலக்கெடு முடிய 36 நாட்கள் மட்டுமே உள்ளது.இன்னும் கூட மாநில அரசு நுழைவு தேர்வுக்கான பாடத்திட்டத்தை அறிவிக்கவில்லை.நுழைவு தேர்வை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்று தெரியவில்லை என்றனர்.
கவர்னர்,முதல்வர் விரைவாக நர்சிங் நுழைவு தேர்விற்கான பாடத்திட்டத்தை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து காத்திருக்கின்றனர்.