உல்லாஸ் தேர்வில் முழு தேர்ச்சி; ஆசிரியைக்கு குவியும் பாராட்டு
உல்லாஸ் தேர்வில் முழு தேர்ச்சி; ஆசிரியைக்கு குவியும் பாராட்டு
UPDATED : ஆக 08, 2026 10:53 PM
ADDED : ஆக 08, 2026 09:00 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி, ஜீவானந்தபுரம் அரசு தொடக்க பள்ளிக்கு உல்லாஸ் தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுத் தந்த ஆசிரியையை பொறுப்பாசிரியர் ராஜ்குமார் பாராட்டினார்.
மாநில பயிற்சி மையம் மூலம் கல்வியறிவு இல்லாதோருக்கு புதுச்சேரி அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த கல்வி பயில்வோருக்கு, உல்லாஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில், ஜீவானந்தபுரம் அரசு தொடக்கப் பள்ளி நுாறு சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது. இந்த தேர்ச்சியை அந்த பள்ளியில் பயிலும் ஆசிரியர் தமிழ்மலர் பெற்று தந்துள்ளார்.
இவரை, பள்ளி பொறுப்பாசிரியர் ராஜ்குமார், பாராட்டி வாழ்த்தினார். நிகழ்ச்சியில், ஆசிரியர் ராஜேஷ், கன்னியம்மா ஆகியோர் கலந்து கொண்டு, ஆசிரியை தமிழ்மலருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
