ADDED : ஜூலை 30, 2026 08:00 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஆர்.டி.ஓ., சலான் என்ற பெயரில் ஆசிரியரின் வங்கி கணக்கில் பணம் அபேஸ் செய்யப்பட்ட செய்தி வாட்ஸ் ஆப்பில் வைரலாகி வருகிறது.
காரைக்காலை சேர்ந்த ஆசிரியர் ஒருவரின், மொபைல் போனுக்கு ஆர்.டி.ஓ., சலான் ஒன்று வந்ததாக காட்டியுள்ளது. அதை அவர் கிளிக் செய்தபோது, அவரின் வங்கி கணக்கில் இருந்த பணம் மாயமாகி உள்ளது.
இது குறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் ஆசிரியர்களின் வாட்ஸ் ஆப் குழுவில் வைரலாகி வருகிறது. அதில், மொபைல் போன் ேஹக் செய்வது வாடிக்கையாகிவிட்டது. மொபைல் போனிற்கு, ஆர்.டி.ஓ., சலான் ஏ.பி.கே., பைல் வந்தால், அதை டவுன்லோடு, இன்ஸ்டால் செய்ய வேண்டாம்; மற்றவர்களுக்கும் பகிர வேண்டாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
