ADDED : ஜூலை 30, 2026 08:00 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மகளிர் காங்., தலைவியை மாற்ற வேண்டும் என, நிர்வாகிகள் தலைமைக்கு மனு அனுப்பியுள்ளனர்.
புதுச்சேரி மகளிர் காங்.,கில் தலைவிக்கு எதிராக சில நிர்வாகிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அவர்கள், அகில இந்திய மகளிர் காங்., தலைவி அல்கா லமபாவிற்கு அனுப்பியுள்ள மனு; புதுச்சேரி மகளிர் காங்., தலைவி நிஷா சமீபத்தில், வெளியிட்ட ஆடியோவில், மாநில தலைவர் வைத்திலிங்கத்திடம், தான் செலவு செய்த 7 லட்ச ரூபாயை நிர்வாகிகள் பெற்றுத் தர வேண்டும்.
ராகுலின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு ஆட்களை அழைத்து வந்ததாக தவறான தகவலை பரப்பி வருகிறார். அவரின் அணுகுமுறை சரியில்லாததால், நிர்வாகிகள் பலர் வெளியேறி விட்டனர். எனவே அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
