/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அந்த நாள்... ஞாபகம் வந்ததே... மாபெரும் சாம்ராஜ்ய வரலாற்றை பேசும் துய்ப்ளேக்ஸ்
/
அந்த நாள்... ஞாபகம் வந்ததே... மாபெரும் சாம்ராஜ்ய வரலாற்றை பேசும் துய்ப்ளேக்ஸ்
அந்த நாள்... ஞாபகம் வந்ததே... மாபெரும் சாம்ராஜ்ய வரலாற்றை பேசும் துய்ப்ளேக்ஸ்
அந்த நாள்... ஞாபகம் வந்ததே... மாபெரும் சாம்ராஜ்ய வரலாற்றை பேசும் துய்ப்ளேக்ஸ்
ADDED : ஆக 03, 2024 11:51 PM

புதுச்சேரியில் கடற்கரை சாலை, பழைய துறைமுகம் எதிரே ஒரு கையில் ஆவண திட்டத்துடன், மற்றொரு கையில் வாளை பிடித்தபடி கூர்மையான கண்களுடன், பண மூட்டைகள் சூழ கம்பீரமாக நிற்பவர் தான் பிரெஞ்சு கவர்னர் துய்ப்ளேக்ஸ்.
ஆங்கிலேயேர்களுக்கு ராபார்ட் கிளைவ் எப்படியோ, அதுபோன்ற பிரெஞ்சுக்காரர்களுக்கு துய்ப்ளேக்ஸ் ஆவார். இந்தியாவில் பிரெஞ்சியர்களின் பலத்தையும், ஆதிக்கத்தையும் நிலைநாட்டிய துய்ப்ளேக்சு, பிரான்சில் நோர்டு என்ற பகுதியில் உள்ள லாந்த்ரேசி என்ற நகரில் 1697ல் ஜனவரி 1ம் தேதி பிறந்தார்.
செல்வந்தரான அவரது தந்தை பிரான்சுவா துய்ப்ளேக்சு மகனின் அறிவியல் நாட்டத்தைத் திசை திருப்பி வணிகத்தில் ஈடுபடுத்த பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தின் கப்பலொன்றில் 1715ல் இந்தியாவிற்கு அனுப்பினார்.
துய்ப்ளேக்சின் சிறப்பான பணியால் 1742ல் இந்தியக் குடியேற்றங்களுக்கான தலைமை ஆளுனராக நியமிக்கப்பட்டார். இவருடைய ஆட்சியின், புதுச்சேரி பல மாற்றங்களை சந்தித்து தென்னிந்தியாவில் பல்வேறு பகுதிகளில் விரிவடைந்தது.
ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுப் படையினருக்குமான மோதல்கள் 1754 வரை நீடித்தது.
இதனால் அமைதியை விரும்பிய பிரான்சு துய்ப்ளேக்ஸ்க்கு மாற்றாக இந்தியாவிற்கு ஓர் சிறப்பு ஆணையரை அனுப்பியது. துய்ப்ளேக்சு கட்டாயமாக அக்டோபர் 12, 1754ல் தாய்நாட்டிற்கு கப்பலில் ஏற்றபட்டார். அதுவரை வெற்றியை ருசித்து வந்த துய்ப்ளேசுக்கு அதன் பிறகு சறுக்கல்கள் ஆரம்பித்தது.
அவர் மீது வழக்கும் பாய்ந்தது. நிறுவன முன்னேற்றத்திற்காக தனது சொந்த உடமைகளை செலவிட்ட துப்ளேக்ஸ் பொருளாதார ரீதியாக நொந்துபோனார். அவருக்கு நிதி உதவி வழங்க பிரான்சு அரசு மறுத்துவிட்டது.
புகழின் உச்சத்தை தொட்ட அவர், கடைசி காலத்தில் வறுமை நிலையில் எவரும் அறியாதது. 1763 நவம்பர் 10ம் தேதி துய்ப்ளேக்ஸ் மரணமடைந்தார்.
காலதாமதமாக தான் அவருடைய தாய் நாட்டு சேவை பிரான்ஸ் நாட்டிற்கு தெரிய வந்தது. அதன் பிறகு துய்ப்ளேக்சின் நினைவினை போற்றும் வகையில், பிரெஞ்சு அரசு, அவர் இறந்த ஒரு நுாற்றாண்டிற்கு பிறகு அதாவது 1870ல் அவருடைய உருவச்சிலையை பிரான்சிலும் பிரெஞ்சிந்தியாவின் தலைமையிடமான புதுச்சேரியிலும் நிறுவியது.
துய்ப்ளேக்சின் சிலை தியோடொரெ குரேர் என்ற சிற்பியால் 1869ல் செய்யப்பட்டு, புதுச்சேரியில் 1870 ஜூலை 16ம் தேதி நிறுவப்பட்டது. வெண்கல உலோகத்தால் செய்யப்பட்ட இந்த சிலையின் உயரம் 2.88 மீட்டர். அவர் வந்து இறங்கிய புதுச்சேரி கடற்கரையிலேயே மாபெரும் சாம்ராஜ்ய வரலாற்றை தன்னகத்தே கொண்டு, கடல் அலைகளை பார்த்தபடியே இன்றும் வீற்றிருக்கிறார் துய்ப்ளேக்சு.