நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உறுவையாறு, சாவித்திரி நகர், இரண்டாவது தெரு அன்பழகன் மகன் தினேஷ், 15; அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார்.
நேற்று முன்தினம் இரவு டியூஷன் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி உள்ளார்.
வீட்டில் புத்தக பை மற்றும் சைக்கிள் நிறுத்திவிட்டு வெளியே சென்ற தினேஷ் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து சிறுவனின் பெற்றோர் வில்லியனுார் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து தினேைஷ தேடி வருகின்றனர்.