/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுமை ஓட்டுச்சாவடிகள் ஆயத்த பணிகளில் தேர்தல் துறை மும்முரம்
/
புதுமை ஓட்டுச்சாவடிகள் ஆயத்த பணிகளில் தேர்தல் துறை மும்முரம்
புதுமை ஓட்டுச்சாவடிகள் ஆயத்த பணிகளில் தேர்தல் துறை மும்முரம்
புதுமை ஓட்டுச்சாவடிகள் ஆயத்த பணிகளில் தேர்தல் துறை மும்முரம்
ADDED : மார் 25, 2024 05:04 AM
புதுச்சேரி: லோக்சபா தேர்தலையொட்டி,l புதுமை ஓட்டுச்சாவடிகளுக்கான அனைத்து பணிகளையும் தேர்தல் துறை முடுக்கிவிட்டுள்ளது.
புதுச்சேரி லோக்சபா தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான 967 ஓட்டுச் சாவடிகளில் ஓட்டு பதிவு நடக்க உள்ளது. இதில் 15 ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. 75 ஓட்டுசாவடிகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
6 ஆயிரம் ஊழியர்கள், 4745 காவலர்கள் மற்றும் 12 கம்பெனியை சேர்ந்த 1,100 துணை ராணுவத்தினர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.புதுச்சேரியில் 237 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். கண்காணிப்பும் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் புதுச்சேரியில் உள்ள 30 சட்டசபை தொகுதிகளிலும் பிரத்யேகமாக 30 மகளிர் நிர்வகிக்கும் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. அத்துடன் புதுச்சேரியில் -3, காரைக்காலில் -1 என, 4 ஓட்டுச்சாவடிகள் இளைஞர்கள் நிர்வகிக்கும் ஓட்டுச்சாவடியாக அமைக்கப்பட உள்ளது.
இதேபோல் 4 ஓட்டுச்சாவடிகள் அனைத்து மாற்றுத்திறனாளிகள் நிர்வகிக்கும் ஓட்டுச்சாவடிகளாக அமைக்கப்பட உள்ளது. 12 ஓட்டுச்சாவடிகள் சுற்றுச்சூழல் போற்றும் வகையில் அமைக்கப்படும். புதுச்சேரி மிஷன் வீதி உள்ள வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அதன் பிராங்கோ - தமிழ் கட்டிடக்கலை பாரம்பரியம் மற்றும் அதன் சமீபத்திய மறுசீரமைப்பு காரணமாக யூனியன் பிரதேசத்தில் தனித்துவமான ஓட்டுச்சாவடி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த ஓட்டுச்சாவடிகளில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தும் பணிகளை தேர்தல் துறை முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளது. இந்த புதுமை ஒட்டுச்சாவடிகளை நேரடியா தேர்தல் துறை உயரதிகாரிகள் பார்வையிட்டு பணிகளை வேகப்படுத்தி வருகின்றனர்.

