/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய இயற்கை அங்காடி இன்று முதல் துவங்குகிறது
/
புதிய இயற்கை அங்காடி இன்று முதல் துவங்குகிறது
ADDED : ஏப் 14, 2024 05:06 AM
புதுச்சேரி: கோட்டக்குப்பம் பகுதி யில் இயற்கை பொருட்களை விற்பனை செய்யும் புதிய அங்காடி இன்று திறக்கப்பட உள்ளது.
கோட்டக்குப்பம், பெரிய முதலியார் சாவடி, ஆரோவில் பிரதான சாலையில், ஜீவராசி அறக்கட்டளை அலுவலகத்தில், 'வேழம்' எனும் பெயரில் இயற்கை அங்காடி இன்று திறக்கப்பட உள்ளது.
இங்கு பனை ஓலைகளால் செய்யப்பட்ட கைவினை பொருட்கள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லா பொருட்கள் என முழுக்க முழுக்க இயற்கை சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
மேலும், இதுபோன்ற இயற்கை பொருட்களை விற்க விரும்புவோர், அந்த அலுவலகத்தில், வைத்து தங்கள் பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம் என, உரிமையாளர் சரஸ்வதி தெரிவித்துள்ளார். இயற்கை சார்ந்த பொருட்களை வாங்க விரும்பும் பொதுமக்கள் இந்த கடையை அணுகலாம்.

