ADDED : ஜூலை 20, 2026 06:11 PM
புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து தலைமையில் இலங்கை எழுத்தாளர் தினேசு பாலன் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலர் சீனு மோகன்தாசு வரவேற்றார். இலங்கை எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான தினேசு பாலன் பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வினை துவக்கி வைத்தார்.
இலங்கை எழுத்தாளர் தினேசு பாலனிடம் தமிழ்ச் சங்க பொன்விழா மலர் வழங்கப்பட்டது. இதில், முனைவர் ஞானஜோதி சரவணன், பொறியாளர் பாலசுப்பிரமணியன், தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உசேன், ராஜா, சிவேந்திரன், ஆனந்தராசன், திருவாசகத் தென்றல் சிவகுமார், சம்பத் மற்றும் தமிழறிஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
