/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'டெபுடேஷன்' பணிக்கு செல்வோர் 'ஜாலி'
/
'டெபுடேஷன்' பணிக்கு செல்வோர் 'ஜாலி'
ADDED : ஆக 25, 2024 05:39 AM
புதுச்சேரியில் திருக்கனுார் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்திற்கு தனி சிறப்பு உண்டு. இக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் போலீஸ் மற்றும் பல அரசு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
மண்ணாடிப்பட்டு தொகுதியில் வசிக்கும் போலீஸ், கொம்யூன் பஞ்சாயத்து கீழ் பணியாற்றும் 100க்கும் மேற்பட்டோர் அமைச்சர் அலுவலக டெபுடேஷன் பணிக்கு அனுமதி பெற்றுள்ளனர். டெபுடேஷன் பணிக்கு செல்ல அதிகம் பேர் ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணம், அமைச்சர் வீடு அல்லது அலுவலகத்தில் அவர்களுக்கு ஒரு நாள் பணி, அடுத்த 2 நாட்கள் ஓய்வு.
அதிக நாள் ஓய்வு கிடைப்பதும், அமைச்சர் அடிக்கடி வெளிநாடு சென்று விடுவதால் கூடுதல் விடுமுறை நாட்கள் கிடைக்கும் என்பதால் டெபுடேஷன் பணிக்கு செல்ல விரும்புகின்றனர்.
இவ்வாறு டெபுடேஷன் பணி பெற்ற 100க்கும் மேற்பட்ட போலீஸ், அரசு ஊழியர்கள் அந்தந்த துறையில் மாத சம்பளம் பெற்றுக் கொண்டு, மண்ணாடிப்பட்டு, திருக்கனுார் பகுதியில் மாதம் முழுக்க வலம் வருகின்றனர்.
டேங்க் ஆப்ரேட்டர்கள் கூட டெபுடேஷனில் சென்று விட்டதால், மண்ணாடிப்பட்டு உள்ளிட்ட பல கொம்யூன் பஞ்சாயத்தில் ஆட்கள் இன்றி நிர்வாகங்கள் தவித்து வருகின்றது.
போலீசிலும் 50க்கும் மேற்பட்டோர் டெபுடேஷனில் சென்று விட்டதால், பல போலீஸ் நிலையத்தில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, அங்குள்ள மற்ற காவலர்களுக்கு பணி சுமை அதிகரித்துள்ளது.

