ADDED : ஜூலை 19, 2026 09:11 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ், 40, என்பவர் மது போதையில், நெட்டப்பாக்கம் ஏரிக்கரை சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொது மக்களை ஆபாசமாக திட்டிக் கொண்டிருந்தார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இதேபோல் பெரிய காலாப்பட்டு பஸ் நிறுத்தம் சந்திப்பில் மது போதையில் ஆபாசமாக பேசிய மரக்காணம் நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜன் 26, சிவானந்தம் 44, ஆகியோரை காலப்பட்டு போலீசார் கைது செய்தனர்.
