ADDED : செப் 08, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கொங்கம்பட்டு சுப்ரமணிய சுவாமி, பஞ்சமுக ஆஞ்சநேயர், இடும்பன் கோவில்களில் இன்று காலை கும்பாபிேஷகம் நடக்கிறது.
இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, கணபதி ேஹாமம் நடந்தது. நேற்று காலை 8:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. இன்று காலை 5:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, 7:45 மணிக்கு கடம் புறப்பாடு, 8:15 மணிக்கு விமான கும்பாபிேஷகம், 8:30 மணிக்கு மூலவர் கும்பாபிேஷகம் நடக்கிறது.