/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நோணாங்குப்பம் படகு குழாமில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
/
நோணாங்குப்பம் படகு குழாமில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
நோணாங்குப்பம் படகு குழாமில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
நோணாங்குப்பம் படகு குழாமில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்
ADDED : மே 20, 2024 05:11 AM
அரியாங்குப்பம் : இரண்டு மாதங்களுக்கு பின்னர் நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
கடலுார் சாலையில் நோணாங்குப்பம் படகு குழாம் உள்ளது. புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடமாகும். வார விடுமுறையான சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில், சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களாக புதுச்சேரியில் கடுமையாக சுட்டெரிக்கும் வெயிலால், சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக காணப்பட்டது. வெயில் காரணமாக சுற்றுலா பயணிகள் வராமல் படகு குழாம் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. வெய்யிலால் அவதிப்பட்ட மக்கள் சற்று மகிழ்ச்சியடைந்தனர். படகு குழாமில், நேற்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. கடந்த இரண்டு மாதத்திற்கு பின்னர் நேற்று சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

